2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
3
நெருப்பு அவர்முன் செல்கின்றது: சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
4
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன: மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது.
5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.