சங்கீதம் 96:7-9 - WCV
7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.
9
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.