சங்கீதம் 94:5-11 - WCV
5
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்: உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்: திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.
7
'ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை: யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர்.
8
மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்: மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?
9
செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
10
மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?
11
மானிடரின் எண்ணங்கள் வீணானவை: இதனை ஆண்டவர் அறிவார்.