சங்கீதம் 90:5-10 - WCV
5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்: அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்:
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்: மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
7
உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்: உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
8
எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்: மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
9
எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன: எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
10
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே: வலிமை மிகுந்தோர்க்கு எண்பது: அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.