2
ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்: உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.
3
உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாயச் சதி செய்கின்றார்கள்: உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
4
அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்: இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.
5
அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்: உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
6
ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர்,
7
கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.
8
அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக் கையாய் இருந்தனர்.