8
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்: வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
9
அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்: அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
10
அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.
11
அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.
12
பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13
காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன: வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.
14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்: இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
16
அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்: அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்: உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!