60
சீலோவில் அழைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்: மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்:
61
தம் வலிமையை அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்:
62
தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்: தம் உரிமைச்சசொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார்.
63
அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது: அவர்களுடைய கன்னியர்க்குத் திருமணப் பாடல் இல்லாது போயிற்று.
64
அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு ஒப்பாரி வைக்க வழியில்லை.