34
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்: மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
35
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர்.
36
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்: தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.