சங்கீதம் 78:3-6 - WCV
3
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை-இவற்றை உரைப்போம்.
4
அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்: வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.
5
யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்: இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்: இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார்.
6
வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள்-இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,