சங்கீதம் 77:7-10 - WCV
7
'என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?
8
அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ?
9
கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?' (சேலா)
10
அப்பொழுது நான், 'உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவதுபோல் என்னை வருத்துகின்றது' என்றேன்.