சங்கீதம் 77:3-9 - WCV
3
கடவுளை நினைத்தேன்: பெருமூச்சு விட்டேன்: அவரைப்பற்றி சிந்தித்தேன்: என் மனம் சோர்வுற்றது. (சேலா)
4
என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்: நான் கலக்கமுற்றிருக்கிறேன்: என்னால் பேச இயலவில்லை.
5
கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்: முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.
6
இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்: என் இதயத்தில் சிந்தித்தேன்: என் மனம் ஆய்வு செய்தது:
7
'என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?
8
அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ?
9
கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?' (சேலா)