16
கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்தது: வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது: ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.
17
கார்முகில்கள் மழை பொழிந்தன: மேகங்கள் இடிமுழங்கின: உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.
18
உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது: மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின: மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.
19
கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்: வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்: ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை.