சங்கீதம் 73:9-15 - WCV
9
விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது: மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.
10
ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்: இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.
11
'இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?' என்கின்றார்கள்.
12
ஆம்: பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்: என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
13
அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?
14
நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்: காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.
15
“நானும் அவர்களைப்போல் பேசலாமே” என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.