3
ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்: பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.
4
அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை: அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.
5
மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
6
எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது: வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.
7
அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன: அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.