சங்கீதம் 72:3-7 - WCV
3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்: குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக: பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!
5
கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக.
6
அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக: நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக.
7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக: நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.