29
எருசலேமில் உமது கோவில் உள்ளது: எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்.
30
நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்: மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்: வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்: போர்வெறி கொண்டு மக்களினங்களைச் சிதறடியும்.
31
எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்: கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்.