சங்கீதம் 64:1-4 - WCV
1
கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.
2
பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்.
3
அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்:
4
மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்: அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்: