1
கடவுளே, எனக்கு இரங்கியருளும்: ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்: அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
2
என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்: மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர்.
3
அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்.