5
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்: அது ஒருபோதும் நிலைகுலையாது: வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.
6
வேற்றினத்தார் கலக்கமுற்றனர்: அரசுகள் ஆட்டம் கண்டன: கடவுளின் குரல் முழங்கிற்று: பூவுலகம் கரைந்தது.
7
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்: யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)
8
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!
9
உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்: வில்லை ஒடிக்கின்றார்: ஈட்டியை முறிக்கின்றார்: தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.
10
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்: வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்: பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.
11
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்: யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.