9
அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்: ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!
10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக்கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு: பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்: உன் தலைவர் அவரே: அவரைப் பணிந்திடு!
12
தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்: செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்.
13
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
14
பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்: கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.
15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.
16
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்: அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர்.
17
என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்: ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.