23
என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்: எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
24
நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்?
25
நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்: எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
26
எழுந்துவாரும்: எங்களுக்குத் துணை புரியும்: உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்.