சங்கீதம் 39:4-7 - WCV
4
'ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும்: அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன்.
5
என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்: என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை: உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)
6
அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்: அவர்கள் வருந்தி உழைப்பது வீண்: அவர்கள் சேமித்து வைக்கின்றனர்: ஆனால் அதை அனுபவித்து யாரென அறியார்.
7
என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.