8
நான் வலுவற்றுப் போனேன்: முற்றிலும் நொறுங்கிப்போனேன்: என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.
9
என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்: என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை.
10
என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது: என் வலிமை என்னைவிட்டு அகன்றது: என் கண்களும்கூட ஒளி இழந்தன.