13
நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன்.
14
உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர்போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்:
15
ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்: என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.