3
ஆண்டவரை நம்பு: நலமானதைச் செய்: நாட்டிலேயே குடியிரு: நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்: உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு: அவரையே நம்பியிரு: அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
7
ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு: தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8
வெஞ்சினம் கொள்ளாதே: வெகுண்டெழுவதை விட்டுவிடு: எரிச்சலடையாதே: அதனால் தீமைதான் விளையும்.
9
தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்: ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.
10
இன்னும் சிறிதுகாலம்தான்: பிறகு பொல்லார் இரார்: அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார்.
11
எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்: அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.