சங்கீதம் 35:9-11 - WCV
9
என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்: அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.
10
“ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.
11
பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்: எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.