சங்கீதம் 34:12-16 - WCV
12
வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?
13
அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு: வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!
14
தீமையைவிட்டு விலகு: நன்மையே செய்: நல்வாழ்வை நாடு: அதை அடைவதிலேயே கருத்தாயிரு.
15
ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன: அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது: அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.