சங்கீதம் 22:27-31 - WCV
27
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்: பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
28
ஏனெனில் அரசு ஆண்டவருடையது: பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.
29
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்: புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.
30
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்: இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
31
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்: இனி பிறக்கப்போகும் மக்களுக்கு”இதை அவரே செய்தார்” என்பர்.