7
அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது: மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன:அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.
8
அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பக்கனல் வெளிப்பட்டது.
9
வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவரது காலடியில் இருந்தது.