5
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்: அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.
7
அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்: மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்:
8
வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்: உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
9
முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்: இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!