2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்: அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.
3
கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்: ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்.
4
விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்: வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள்.
5
அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்: ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன: