1
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்: உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்: உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்: பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்: அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்: வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.