10
எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
11
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
12
தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
13
செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
14
அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
15
பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
16
பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
17
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
18
வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
19
எமோரியரின் மன்னன் சீகோனை கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
20
பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
21
அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
22
அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
23
தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.
24
நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.