5
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்: என் நெஞ்சம் காத்திருக்கின்றது: அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
7
இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு: பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது: மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.