சங்கீதம் 13:1-3 - WCV
1
ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2
எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது: எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
3
என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்: என் விழிகளுக்கு ஒளியூட்டும்.