சங்கீதம் 116:12-19 - WCV
12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
14
இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்: நான் உம் பணியாள்: உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்: ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்:
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்:
19
உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா!