சங்கீதம் 114:4-7 - WCV
4
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.
5
கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?
6
மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?
7
பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!