1
அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்: அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்: நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.
3
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்: அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.