35
பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார்.
36
பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர்.
37
அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்: அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.
38
அவர் ஆசி வழங்கினார்: அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்: அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.