20
தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுவித்தார்.
21
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
22
நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக!