17
அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்: யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.
18
அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19
காலம் வந்தது: அவர் உரைத்தது நிறைவேறிற்று: ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.
20
மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்: மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்: