11
அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்: காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்:
12
நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன: அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன:
13
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்: உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்: மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்: இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்: