சங்கீதம் 103:9-16 - WCV
9
அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்: என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ: அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14
அவர் நமது உருவத்தை அறிவார்: நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
15
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.
16
அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது: அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.