19
அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்: ஏழைகளை விடச் செல்வரை உயர்வாயக் கருதவுமாட்டார்: ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
20
நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்: நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்: ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.
21
ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன: அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.
22
கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை: இறப்பின் நிழலும் இல்லை.
23
இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க, எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.
24
வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.