10
ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்: ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.
11
ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்: திராட்சைத் பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.
12
நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது: காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது: கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.