28
ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்: 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'
29
வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா? அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?
30
தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்: வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?