யோபு 20:5-16 - WCV
5
கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே!
6
அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும்,
7
அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்: அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.
8
கனவுபோல் கலைந்திடுவர்: காணப்படார்: இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.
9
பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது: வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.
10
ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்: அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.
11
எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.
12
தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,
13
இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,
14
வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே:
15
செல்வத்தை விழுங்கினர்: அதை அவர்களே கக்குவர்: இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.
16
விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்: கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.