யோபு 17:11-15 - WCV
11
கடந்தன என் நாள்கள்: தகர்ந்தன என் திட்டங்கள்: அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.
12
அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்: ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.
13
இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,
14
படுகுழியை நோக்கி “என் தந்தையே” என்றும், புழுவை நோக்கி “என் தாயே, என் தமக்கையே” என்றும் புகல்வேனாகில்,
15
பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?