எஸ்தர் 7:8 - WCV
மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கச் கண்டனர். “என் மாளிகையில நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?” என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.