எஸ்தர் 3:10-15 - WCV
10
அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
11
மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்: உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய்” என்றார்.
12
உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்து அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
13
அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.
14
இம்மடலின் நகல் ஒவ்வொன்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.
15
விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.